செப்டெம்பர் 1இல், ஜெயராஜ் கொலை வழக்குத் தீர்ப்பு! உண்மையை மறைக்க மயிர் சிலிர்க்கும் சதி!?

0
522

 

லக்ஷ்மன் குரே களனி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டதாரியும் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டதாரியும் ஆவார். இவர்தான் இலங்கை பொலிஸ் துறையில் இள வயது உதவி பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஆவார். பலமுறை தீவிரவாத தாக்குதல்களை சந்தித்தவர். திருமணமான 3 மாதங்களில் லக்ஷ்மன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அவர் 12 ஆண்டுகள் சிறையில் இருந்தார். ஆனால் பிணை வழங்கப்படவில்லை. சட்டமா அதிபர் திணைக்களமும் பயங்கரவாத தடை பிரிவும் இந்த வழக்கை சூழ்ச்சிகரமாக இழுத்தடித்தன. இது சட்ட விதியை மீறிய செயலாகும். இந்த சம்பவம் UNHRC ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு கவனத்தை ஈர்த்தது.

இதுவரை காலமும், பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை விடுவிக்க அரசாங்கத்திற்கு சர்வதேச அளவில் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.  இதனிடையே, இந்த வழக்கின் தீர்ப்பு செப்டெமபர் 1-ம் திகதி அறிவிக்கப்பட உள்ளது.

இருப்பினும், லக்ஷ்மனின் பாதுகாப்பு ஒரு சர்ச்சைக்குரிய ஒன்றாகும். லக்ஷ்மன் குரே வெளிப்படுத்துவது போல் ஜெயராஜின் படுகொலை ராஜபக்ஷக்களின் சதிச்செயல். ஜெயராஜ் பிரதமர் பதவியை கோரியதால்  ஒரு கொடி அசைவு திட்டத்தின் மூலம் அவர் கொல்லப்பட்டார்.

லஷ்மனின் வாக்குமூலம் உண்மை என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. அவரை சிறையில் கொல்ல எடுத்த முயற்சி இரண்டு முறை தோல்வியடைந்தது. லக்ஷ்மன் வெளிப்படுத்துவது போல், இது ஒரு ஒப்பந்தக் கொலை.

செப்டெம்பர்.1ம் திகதி வழக்கில் இருந்து லஷ்மன் விடுவிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக, லஷ்மனை காவலில் வைக்க மயிர் சிலிர்க்கும் சதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் 12 வருடங்களாக தூக்கி எறியப்பட்ட வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் மீண்டும் தூசி தட்டி எடுக்கப்பட்டது.  வழக்கு இலக்கமான HC 3650 இன் கீழ் அது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (இந்த வழக்கு 22 செப்டெம்பர் 2022 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது)

ஜெயராஜ் கொல்லப்பட்டது தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல் அல்ல தென்னிலங்கையின் சதிச்செயல் என்பதையே இது காட்டுகிறது.

லக்ஷ்மன் குரேவுக்கு, விடுதலைப் புலிகள் என்று முத்திரை குத்தப்பட்டதால் அவருக்கு ஏற்பட்ட அநீதி குறித்து ஊடகங்கள் குரல் எழுப்பவில்லை. அரசியல்வாதிகளும் பேசவில்லை. பயங்கரவாத தடை சட்டத்தின் ஆபத்தான தன்மையையும் சிவில் சமூகத்தின் மனசாட்சியின் முட்டாள்தனத்தையும் காட்டிய கண்ணாடி இது.

உண்மைகள் இப்படியிருக்கையில்,  மாண்புமிகு நீதிமன்றம் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் என்று நம்புகிறோம்.