பயங்கரவாத தடை சட்டம்! பழிவாங்கல் சூழ்ச்சி வேண்டாம்

0
328

51வது UNHRC அமர்வுக்குப் பிறகு, பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) சர்வதேச எதிர்ப்பு ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் மனிதாபிமானமற்றது என்றும் முக்கியமாக 3 பகுதிகளில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் பேரவை மதிப்பீடு செய்துள்ளது.

1. இனப் பழிவாங்கல்,

2. அரசியல் பழிவாங்கல்

3. நபர்களை மிரட்டி தண்டிக்கும் கருவியாக பயன்படுத்தல்

இதன்காரணமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல சந்தேக நபர்களை எதிர்வரும் 2 வாரங்களில் விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை விடுவிக்கும் நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லாதது ஒரு பிரச்சினையாகும்.

கைதிகளை விடுவிக்கும் முறை சரியாக இருந்தால், பயங்கரவாத தடைச் சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை முதலில் விடுதலை செய்ய வேண்டும்.

ஆனால், 13 ஆண்டுகளாக பிணை இன்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லக்ஷ்மன் குரே மற்றும் பல ஆண்டுகளாக  தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முகமது பசல் ஆகியோர் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அவர்களின் சூழலில் எதிர்பார்ப்பு என்பது நிரபராதி என்று அல்லாது பிணையில் விடுதலையாவதாகும்.