அவசரகால சட்டம் குறித்து வெளிநாட்டு துதூவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு

0
705

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹஷந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்மா தேரர் ஆகியோர் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கைது செய்யப்பட்டவுடன் சர்வதேச சமூகம் இலங்கை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என பலரும் நினைத்தனர். ஆனால் அது நடக்கவில்லை.

இது தொடர்பில் சர்வதேச சமூகம் மெளனம் சாதிப்பது தொடர்பில் கொழும்பில் உள்ள பல தூதரக அதிகாரிகளிடம் கேட்டறிந்தோம்.

நடந்த போராட்டம் தலைமை இன்றி திட்டம் இல்லாமல், பணத்தை  மட்டுமே வைத்து முன்னெடுக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.

செயற்பாட்டாளர்களுக்கு மூளை இருந்தால் முதலில் செய்ய வேண்டியது அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து பயங்கரவாதச் சட்டத்தை திரும்பப் பெறுவதே என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அன்று அதனை செய்திருந்தால் இன்று கைது செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் என தூதுவர்கள் சுட்டிக்காட்டினர்.

பல வருடங்களாக தடுப்புக் காவலில் உள்ள சந்தேக நபர்களும் பயன்பெறுவார்கள் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இன்றைய போராட்டத் தலைவர்கள் தங்கள் தோல்விக்கு பலியாகிவிட்டதாகவும் தெரிவித்தனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இதுவரை 100 சந்தேக நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச் சட்ட சந்தேக நபர்களின் சுதந்திரத்திற்காக ஏதாவது செய்யுமாறு போராட்டத் தலைவர்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் போராட்டத் தலைவர்கள் எதனையும் செய்யவில்லை.

இறுதியில், போராட்டத்தால் நாட்டிற்கு பெரும் பொருளாதார சேதமே ஏற்பட்டது.

ஆதரவற்ற PTA சந்தேக நபர்கள் சிறையில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். UNHRC அமர்வு செப்டம்பர் 23 ஆம் திகதி தொடங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.