தாமரை கோபுரத்தில் 100 மில்லியன் டொலர்கள் வசூல் என்பது முற்றிலும் போலியான செய்தி

0
515

தாமரை கோபுரம் 100 மில்லியன் டொலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளதாக FB போஸ்டர்கள் தற்போது பரிமாறப்பட்டு வருகிறது.

இத்தகைய போஸ்டர்கள் பல பிரபலமான FB பக்கங்களில் காணப்பட்டன.

நாங்கள் இங்குள்ள உண்மை மற்றும் பொய்யை தேடிப் பார்த்தோம். அதன் கண்டுபிடிப்புகள் பின்வருமாறு.

100 மில்லியன் டொலர்களை ரூபாயாக மாற்றும் போது, அது 37 பில்லியன் ரூபாவாகும்.

தாமரை கோபுரம் செப்டம்பர் 15 ஆம் திகதி பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது.

திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அதிக வசூல் கிடைத்தது. முதல் நாள் வருமானம் 1.5 மில்லியன் மட்டுமே. அதாவது 4215 டொலர்கள் ஆகும்.

செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் செப்டெம்பர் 18ஆம் திகதி வரையில் தாமரை கோபுரத்தின் மூலம் கிட்டத்தட்ட 5 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது. அதாவது 14000 டொலர்கள் மட்டுமே.

தாமரை கோபுரத்தின் மூலம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்ததாக வெளியாகும் செய்தி முற்றிலும் போலியானது.